பெரியாரின் சிலைக்கு தீ வைப்பு… மர்மநபர்களை கைது செய்ய மக்கள் போராட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், கத்தாழை மேடு பகுதியில் இருந்த பெரியார் ஈ.வெ ராமசாமி சிலைக்கு அதிகாலை மர்மநபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், குப்பம் சாலை அருகே அமைந்துள்ள, கத்தாழ மேடு கிராமத்தில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. இதன் நுழைவாயிலில் ஈ வெ ராமசாமியின் மார்பளவு வெண்கல சிலை ஒன்று உள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் டயரை கொளுத்தி அந்த சிலையின் மீது போட்டு கொளுத்தி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அந்த மர்ம நபர்களை விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.

இந்நிலையில், பெரியார் சிலைக்கு தீ வைத்த நபரை போலீஸார் கைத்து செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…