திமுக காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது… காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள்?

திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
திமுக கூட்டணியில் அடுத்தடுத்து கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்துவந்த நிலையில் காங்சிரஸ் உடன் இழுபறி நீடித்தது. இந்த நிலையில் நேற்று இரவில் காங்கிரஸ் நிர்வாகிகள், ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தனர்.
அப்போது தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றனர். அங்கு இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.
அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.