மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை…!

கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை திடீரென உயர்வு கண்டுள்ளது.
கொரோனா காலத்தில் 40 ஆயிரம் ரூபாயை தொட்ட தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக 34 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்தது. கொரோனா காலத்தின் போது உலக அளவில் தங்கத்தின் மீது முதலீடு அதிகம் இருந்தது. வேறு எந்த முதலீடும் இல்லாத சூழலில் மக்கள் தங்கத்தை நாடினார்கள்.
ஆனால் தற்போது தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது. அதனால் உலக அளவில் தங்கத்தின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. இதே நிலை நீடித்தால் 30 ஆயிரத்துக்கும் கீழ் தங்கம் விலை குறையும் என பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,216 க்கு விற்பனையாகிறது . சவரனுக்கு ரூ.265 உயர்ந்து ரூ .33,728 க்கு விற்பனையாகிறது . வெள்ளிவிலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ .70.10 க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ .70,100 க்கும் விற்பனையாகிறது .