பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு – ஒப்பந்தம் கையெழுத்தானது!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ், பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கட்சிகள் இடையே கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக நிலை இன்னும் தெரியவில்லை. மேலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பாஜக 22 முதல் 25 வரை கேட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ், பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *