எனக்கு கொரோனா தொற்று இருக்கு… பறக்கும் விமானத்தை பதறவிட்ட பெண்!

டெல்லியில் இருந்து புனேவுக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணி ஒருவர் தனக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்றதால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

இண்டிகோ விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் பயணி ஒருவர் ஊழியர்களிடம் பேசினார். அவர் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி, அதற்கான சான்றையும் காட்டினார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது குறித்து விமானியிடம் தகவல் தெரிவித்தனர்.

அதிர்ச்சி அடைந்த விமானி உடனடியாக தரைக்கட்டுப்பாட்டு குழுவினரை தொடர்பு கொண்டு விமானத்தை மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்பினார். இதுகுறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவித்த விமானி, கொரோனா பாதித்த பயணி அருகில் இருந்தவர்கள் உடனடியாக தனிமை முகாமுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கவிடப்பட்டனர். இருக்கைகள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவச உடைகள் தரப்பட்டு விமானப் பயணம் முழுவதும் அதை அணிந்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு விமானம் புனேவுக்கு புறப்பட்டு சென்றது. கொரோனா பாதித்த நபர் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். துரிதமாக செயல்பட்டு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்ட விமான நிறுவனத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…