ஆன்லைனில் ஆர்டிஓ சேவைகள்… மத்திய அரசு அறிவிப்பு!

ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்லாமல் எல்.எல்.ஆர், வாகன பதிவு உள்ளிட்ட 18 விதமான சேவைகள் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளலாம் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி, பழகுநர் உரிமம்(எல்எல்ஆர்), ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு, டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ், ஓட்டுநர் உரிமம், ஆர்சி புக்கில் முகவரி மாற்றுதல், சர்வதேச அளவில் ஓட்டுநர் உரிமத்துக்கு அனுமதி, வாகன உரிமத்தை ஒப்படைத்தல் ஆகிய சேவைகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.

அதே போல், தற்காலிகமாகப் பதிவெண் பெற விண்ணப்பித்தல், முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட வாகனத்துக்கு பதிவெண் பெற விண்ணப்பித்தல், டூப்ளிகேட் பதிவெண் பெற விண்ணப்பித்தல், என்ஓசி சான்றிதழ் பெற, வாகன உரிமையாளரை மாற்ற, ஆர்சி புத்தகத்தில் முகவரி மாற்றுவது ஆகிய சேவைகளை ஆன்லைன் மூலம் பெறலாம்.

மேலும், ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி பெற விண்ணப்பம் பதிவு செய்தல், உயர் அதிகாரிகளுக்கு வாகனத்தைப் பயன்படுத்தப் பதிவு செய்ய விண்ணப்பித்தல், வாகனத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெறலாம்.

வாகனத்தை வாடகைக்கு எடுத்த காலம் முடிந்தபின் ஒப்பந்தத்தை ரத்து செய்தல், வாகனத்தின் உரிமத்தை மாற்ற, தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு புதிய வாகன பதிவெண் பெற விண்ணப்பித்தல் ஆகிய சேவைகளை ஆன்லைன் மூலம் பெறலாம் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…