பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பியை சஸ்பெண்ட் செய்யக் கோரி பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை!

பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய டிஜிபி அந்தஸ்து அதிகாரி மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முதல்வர் பழனிசாமியின் பரப்புரைக்கு அவரது பாதுகாப்புக்காக சென்னையில் இருந்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்றிருந்த நிலையில், அவருடன் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் சென்றிருந்தனர். பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில், காரில் சிறப்பு டிஜிபி பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி, டிஜிபி திரிபாதியிடம் சிறப்பு டிஜிபிக்கு எதிராக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும் அவர் காத்திருப்பு பட்டியலுக்கும் மாற்றப்பட்டார். சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுவதாக நேற்று டிஜிபி திரிபாதி அறிவித்தார்.

இந்நிலையில் பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்யக்கோரி 10 பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…