டாப்ஸி வீட்டில் வருமான வரி சோதனை!

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் தயாரிப்பாளர்கள் மது வர்மா, விகாஷ் பேல் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது.மும்பை மற்றும் புனே நகர்களில் உள்ள 20 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோதனையின் முடிவில் ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்கை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்து செல்லவும் வருமானவரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
பாண்டோம் பிலிம்ஸ் மற்றும் குவான் ஆகிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், வருவாயை மறைத்துள்ளதாகவும் வருமான வரித்துறைக்கு புகாா்கள் வந்துள்ளது.

அந்தப் புகாா்களின் அடிப்படையில் இரு நிறுவனங்களுடன் தொடர்புடைய நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்ப் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. 


இயக்குநர் அனுராஜ் காஷ்யப், இயக்குநர் விக்ரமாதித்யா, தயாரிப்பாளர் மது மண்டேனா,  விகாஷ் பால் ஆகிய நால்வரும் இணைந்து 2011-ல் பாண்டோம் ஃபிலிம்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். எனினும், கடந்த அக்டோபர் 2018-ல் இந்த நிறுவனம் மூடப்பட்டது. 

நடிகை டாப்ஸி மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்ப் ஆகியோர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்து குறிபிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *