புதுச்சேரி: பாஜக கூட்டணியிலிருந்து என்.ஆர். காங்கிரஸ் விலகல்!

புதுச்சேரியில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அடுத்து எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில், என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி இருந்தது. திடீரென இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில், பாஜக ஆட்சி அமையும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்ததால் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக என்.ஆர். காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மேலும், தேர்தல் நெருங்குவதால் என்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…