ஒரே மாதத்தில் அதிக விடுமுறைகள்.. கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்?

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் அதிக நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக, ஜனவரி மாதத்தில் பண்டிகை நாட்கள் நிறைந்து காணப்படுவதால் அதிக விடுமுறை இருக்கும். ஆனால் அதன் பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விடுமுறை நாட்கள் குறைவாகவே இருக்கும்.

அதனையே பெரும்பாலானோர் வங்கி வேலை நாட்களை திட்டமிட்டு பணபரிவர்த்தனை செய்வர். அந்த வகையில், இந்த மாதத்தில் வங்கி தொடர்பான எந்த வேலையாவது நீங்கள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் அதனை விரைவாக முடித்துக் கொள்வது சாலச்சிறந்தது என பொருளாதார ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

அதாவது, ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் மொத்தம் 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். அதன்படி மார்ச் 11 ம் தேதி மகா சிவராத்திரி, மார்ச் 29 ஹோலி,  2 சனிக்கிழமைகள்,  4  ஞாயிற்றுக்கிழமைகள் சேர்த்து மொத்தம் 8 நாட்கள் விடுமுறை ஆகும்.

மேலும் மார்ச் 15 மற்றும் 16ல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய நாட்களிலும் வங்கிகள் இயங்காது. ஆண்டு இறுதி கணக்கை முடிக்க வேண்டியிருக்கும் மார்ச் மாதத்தில் வங்கிகள் 10 நாட்கள் விடுமுறை இருப்பது வாடிக்கையாளர்களையும், வியாபாரிகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மார்ச் 15, 16 தேதிகள் திங்கட்கிழமை, செவ்வாய் கிழமை வருகின்றது. அதற்கு முந்தைய இரு தினங்கள் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், தொடர்ந்து வங்கிகள் 4 தினங்களுக்கு இயங்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்கள் முடங்கிப் போவதற்கான அபாயம் நிறையவே உள்ளன. ஏற்கெனவே பல ஏடிஎம் இயந்திரங்களில் வெறும் 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே வருவதாக வாடிக்கையாளர்கள் குறை கூறி வருகின்றனர். இந்நிலையில், வங்கிகளுக்கு  4 நாட்கள் தொடர் விடுமுறையாக இருந்தால், வாடிக்கையாளர்களும் கடும் சிரமம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *