திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது!

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 2ம் தேதி நடைபெறும் என்று சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வரும் சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பிரச்சாரங்கள் களைக்கட்டியுள்ளன.

தமிழக அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டனி உடன்பாட்டில் தீவிரம் கூட்டி வருகின்றனர். அதிமுக கட்சியில் இதுவரை பாமக  கட்சிக்கு மட்டும் 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டனியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிகள் இரண்டு நாள்களாக தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நிலவி வந்தது. இன்று தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தற்போது திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு திமுக கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து பேட்டியளித்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், 5 தொகுதிகள் கேட்ட நிலையில், திமுக கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதால் 3 தொகுதிகள் ஐயூஎம்எல் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் அக்கட்சியாந்து ஏணி சின்னத்தில் போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…