உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு… சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

மார்ச் 8ஆம் தேதி நடைபெற இருந்த உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழக சீருடை தேர்வு குழுமம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 8ஆம் தேதி உடற்தகுதி தேர்வு 41 மையங்களில் நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் 8ஆம் தேதி நடைபெற இருந்த உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 12ஆம் தேதி இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு துறை வீரர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்றும் அன்றே உடற்தகுதி தேர்வும் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக சீருடை தேர்வு குழுமம் சார்பில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை, சிறை, தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள 11,741 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வுகள் அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…