மார்ச் 31 வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிப்பு – தமிழக அரசு!

தமிழகத்தில் மார்ச் 31 வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. தொடக்க காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருந்த பொது முடக்கம் படிப்படியாக தளர்த்தப்பட்டது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் படிப்படியாக குறைய தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், மருத்துவ வல்லுநர்கள் குழு மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மார்ச் 31 வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.