இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்!

வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 2ம் தேதி நடைபெறும் என்று சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வரும் சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பிரச்சாரங்கள் களைக்கட்டியுள்ளன.

தமிழக அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டனி உடன்பாட்டில் தீவிரம் கூட்டி வருகின்றனர். வரும் தேர்தலில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது கட்சி அமையும் என தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்துள்ளன.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *