போக்குவரத்துக் கழக போராட்டம் தற்காலிக வாபஸ்?

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 25-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.

தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாலை 3 மணிக்கு போக்குவரத்து தொழிலாளர்களுடன் தொழிலாளர் நல ஆணையம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இந்தப் பேச்சு வார்த்தையில், போராட்டத்தால் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெறுவதாக முடிவு எட்டப்பட்டுள்ளது.

மேலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…