நல்லவர்கள் கூட்டணி!
தமிழகத்தில், ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியது. திமுக கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயகக் கட்சி வெளியேறி உள்ளது.
இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள், மக்கள் நீதி மக்கள் கட்சித் தலைவர் கமலஹாசனை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதன்பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்தார்.
அதில், “ நல்லவர்கள் எல்லாம் இணையலாம் என கமல் கூறியதால், சிறப்பான கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதனால், இந்தக் கூட்டணியில் வந்து இணைய விரும்பும் கட்சிகள் வரலாம். தமிழக மக்களிடம் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். இந்த முறை ஓட்டுக்கு காசு வாங்கி உங்களை நீங்களே விற்று விடாதீர்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை விட இந்தக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.