தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி – தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன

தமிழ்நாட்டில் மே 24 ஆம் தேதியுடன் சட்டமன்றத்தின் பதவிகாலம் முடிவடைகிறது.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் அதிகாரி, சுனில் அரோரா இன்று செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவிக்கிறார்.

இதன்படி, தமிழகத்துக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதி முறைகளும் நடைமுறைக்கு வருகிறது.

கொரோனா காலம் என்பதால் வாக்கு பதிவுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் உள்ளன. 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்குகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்க, ஒரு கட்சிக்கு 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து மாநிலங்களிலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்துக்கான இடைத் தேர்தலும் ஏப்ரல் 6 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…