இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன் காலமானார்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (பிப்.26)காலமானார். அவருக்கு வயது 89.
தமிழக மக்களால் தா.பா என்று என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன். கொரோனாவிலிருந்து மீண்ட தா. பாண்டியன், சிறுநீரக தொற்று சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாள்களாக தா.பாண்டியனின் உடல்நிலை மோசமடைந்ததால், புதன்கிழமை அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் செயற்கை சுவாசக் கருவியுடன் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் தா. பாண்டியன் காலமாகியுள்ளார்.
எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி பன்முக ஆளுமையாக திகழ்ந்தவர் தா. பாண்டியன். சென்னை அம்பேத்கர் கல்லூரியில் சட்டம் படித்தவர். இதுவரை 8 நூல்களை எழுதியுள்ளதுடன், 6 நூலகளை மொழிப்பெயர்த்துள்ளார். 1953ல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த தா. பாண்டியன் 63 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். 1989,1991 ஆண்டுகளில் இருமுறை வென்ற வட சென்னை தொகுதியில் வென்று மக்களவை உறுப்பினராக இருந்து சேவை ஆற்றியுள்ளார்.
மறைந்த மூத்த அரசியல் தலைவர் தா.பாண்டியனின் உடல் தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும், சமுதாயத்தை சேர்ந்தவர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.