பன்முகத் தன்மையின் அடையாளம் புதுச்சேரி – பிரதமர் மோடி
புதுச்சேரிக்கு வந்துள்ள பிரதமர் மோடி பல கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரிக்கு வந்துள்ள பிரதமர் மோடி ரூ.2,426 கோடியில் 56 கி.மீ. தூரம் அமையும் காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் – நாகை NH45A நெடுஞ்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டினார். ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் காரைக்கால் கிளையில் ரூ.491 கோடி புதிய கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். ஜிப்மரில் ரூ.28 கோடியில் ஆராய்ச்சி கூடத்துடன் கூடிய ரத்த வங்கியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மேலும் ரூ.15 கோடியில் கட்டப்பட்ட பிரெஞ்ச் கலைப்பாணியில் கட்டப்பட்ட பாரம்பரிய மேரி கட்டடத்தையும் மோடி தொடங்கி வைத்தார். சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடி மதிப்பில் துறைமுகம் அமைக்கும் பணியையும் மோடி தொடங்கி வைத்தார். இந்திராகாந்தி விளையாட்டுத் திடலில் ரூ.7 கோடி மதிப்பில் 400 மீட்டர் செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார்.