நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் விலகி தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனி கட்சியை தொடங்கி உள்ளார்.

லோக்சபா தேர்தலில்  திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். திண்டுக்கல் பிரசாரத்தின் போது நூதனமான முறைகளில் மன்சூர் அலிகான் பிரசாரம் செய்தார்.

அத்தேர்தலில் மொத்தம் 54,957 வாக்குகளை மன்சூர் அலிகான் பெற்றிருந்தார். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் தாம் போட்டியிட உள்ளதாக மன்சூர் அலிகான் வீடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திடீரென சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், சட்டசபை தேர்தலில் சீமான் எனக்கு தொகுதி ஒதுக்கவில்லை. இது வருத்தத்தை தருகிறது. தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளேன் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *