ஒரே மாதத்தில் 3வது முறையாக உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலை… கலக்கத்தில் பொதுமக்கள்

பிப்ரவரி மாதத்தில் சமையல் எரிவாயு உருளை விலை இரண்டு தடவை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ஒரே மாதத்தில் ரூ.100 அதிகரித்துள்ளது.
பிப்ரவரியில் மூன்றாவது முறையாக ரூ.25 விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.785-இல் இருந்து ரூ.810 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக அதிகரித்துள்ள வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றால் ஏற்கெனவே பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு, தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.