போராட்டத்தில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்!
தமிழக அரசிடம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக ஊழியர்கள், பிப்ரவரி 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.
ஊதிய உயர்வு, தற்கால பணியாளர்களை நிரந்தரமாக்குவது, தமிழகம் முழுவதும் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.
நாளை போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாளை பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடிவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.