புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி!

புதுச்சேரியில், எம்.எல்.ஏக்கள் பதிவி விலகிய விவகாரத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனால், முதல்வர் நாராணசாமி தன் ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநரிடம் அளித்தார்.
இதனையடுத்து, புதுச்சேரியில் ஆட்சியமைக்க யாரும் உரிமை கோரவில்லை. இதனால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பரித்துரைத்துள்ளார். இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யும் என தெரிவிக்கக்ப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.