வெள்ளத்தில் மூழ்கிய வயல்கள்… விரக்தியில் கதறி அழும் விவசாயி!
கடலூர் மாவட்டத்தில் 20-ஆம் தேதி இரவு 12 மணிக்கு தொடங்கி மறுநாள் 21 ஆம் தேதி பிற்பகல் 12 மணி வரை 12 மணி நேரத்தில் கடலூர் பகுதியில் 29 சென்டி மீட்டர் மழையும், ஆட்சியர் அலுவலக பகுதியில் 28 சென்டிமீட்டர் மழையும் வானமாதேவி பகுதியில் 13 சென்டிமீட்டர் மழையும் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பிப்ரவரி மாதத்தில் சில மணி நேரத்தில் வரலாறு காணாத மழையை பெய்து இயற்கை கோரத்தாண்டவம் ஆடியுள்ளது.
இதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது பல குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது நீர்நிலைகள் நிரம்பியது. விவசாய நிலத்தில் வெள்ள நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மழை நீரை அப்படியே முழுகி தத்தளிக்கிறது
இதனால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறதது சில நாட்களில் அறுவடை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வாங்கிய கடனை அடைக்கலாம் வீட்டுக்குத் தேவையான வற்றை வாங்கலாம் என இருந்த விவசாயிகளுக்கு மிகப்பெரிய பேரிடியாக இந்த வரலாறு காணாத கனமழை பேரழிவை ஏற்படுத்தியது
அப்படித்தான் குமளங்குளம் பகுதியில் பெய்த மழையில் விவசாய நிலம் நீரில் மூழ்கியது குமளங்குளம் பகுதியை சேர்ந்த ஜோதி என்ற விவசாயி நான்கு ஏக்கரை ஆண்டுக்கு லட்ச ரூபாய் என குத்தகை பிடித்து விவசாயம் செய்து வருகிறார். அதில் விளைந்த நெல் இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த போது மழை நிலத்தை மூழ்கடித்தது இந்த பேரழிவை எதிர்பாராத ஜோதி நிலத்தை பார்த்து கதறிக் கதறி அழுது புரண்டுள்ளார்.
நிலம் முழுவதும் பயிர்களை கட்டிபிடித்து கண்ணீர் விட்டு கதறியுள்ளார் பலமணி நேரமாக விழுந்து விழுந்து அழுததைப் பார்த்த அருகில் இருந்த விவசாயி ஒருவர் வீட்டுக்கு அழைத்துள்ளார் வர மறுத்த ஜோதி மழையில் மிதந்து கொண்டிருந்த பயிர்களை தொடர்ந்து கட்டியணைத்து கதறி கதறி அழுதுள்ளார். இதை பார்த்த மற்றொரு விவசாயி செல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். விவசாயின் நெஞ்சுருக வைக்கும் கண்ணீர் அதனை பார்த்த பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
இதுபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயிகளும் கடந்த மூன்று மாதங்களாக நான்கு பேரழிவை சந்தித்துள்ளனர் அரசு என்னதான் நிவாரணம் கொடுத்தாலும் இதுபோல் விவசாயிகளை மனரீதியாக இந்த பேரழிவு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் இது போல் பேரழிவில் இருந்து பாதுகாக்க நிலங்களில் ஒட்டியிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை தூர்வார வேண்டும் நேரடி கொள்முதல் மையங்கள் முறையாக களம் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரவேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் வைக்கின்றனர் அரசு செய்யுமா அல்லது கண்ணீரிலும் தண்ணீரிலும் மிதக்க விடுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்