போக்குவரத்துக் கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
தமிழக அரசிடம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக ஊழியர்கள், பிப்ரவரி 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு, தற்கால பணியாளர்களை நிரந்தரமாக்குவது, தமிழகம் முழுவதும் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.