காவிரி -குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

காவிரி -குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழாவுக்கு தலைமை தாங்கினார். இந்த விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள நிலங்கள் பயன்பெறும் என கூறப்படுகிறது.

காவிரி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரிநீரை மாயனூர் தடுப்பணையில் இருந்து குண்டாற்றுடன் இணைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. காவிரி -குண்டாறு இணைப்பு திட்டத்தின் மூலம் தென் மாவட்ட மக்களின் 100 ஆண்டுகால கனவு நிறைவேற்றும்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…