முதல்வருக்கு எதிராக செயல்படுபவர் ஓ.பி.எஸ் – ஸ்டாலின்
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில், பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளை ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இதன்படி, இன்று தேனி மாவட்டத்தில் பரப்புரை நடைபெற்று வருகிறது.
இதில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைப் பற்றி பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். ஒரே கட்சியில் இருந்து கொண்டு முதல்வருக்கு எதிரான ஓ.பி.எஸ் செயல்படுகிறார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, சமாதியில் தியானம் செய்தது யார்? பின்னர், அதை மறந்து விட்டு பழனிச்சாமியுடன் சேர்ந்தது யார்?
அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு தன் உறவினர்களுடன் சேர்ந்து பல குற்றங்களைச் செய்து வருகிறார். அவர் மீதான குற்றங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.