திமுக: இன்று முதல் விருப்ப மனு விநியோகம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனு விநியோகம் அறிவாலயத்தில் தொடங்கும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப் 24 ஆம் தேதிக்குள் அறிவாலயத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனுவைப் பெற 1000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *