தமிழகம் முழுவதும் பிப் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, சமையல் எரிவாயுவின் விலையும் ஒரு மாதத்தில் இரண்டு முறை அதிகரித்து.

இந்த விலை ஏற்றத்தைக் கண்டித்து, திமுக சார்பில் பிப்ரவரி 22 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாஜக, அதிமுக அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.