புதுச்சேரி பாஜக நிர்வாகிகளுக்கு அமித்ஷா அவசர அழைப்பு

புதுச்சேரியில், காங்கிரஸின் நான்கு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஆளும் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை எண்ணிக்கை 14 ஆக குறைந்தது.

இதனால், முதல்வர் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுச்சேரி பாஜக நிர்வாகிகளை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி, புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன், பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் டெல்லி செல்கின்றனர். இவர்களோடு காங்கிரஸில் இருந்து பாஜகவுக்குச் சென்ற முன்னாள் எம்.எல்.ஏ நமச்சிவாயமும் செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *