பழி தீர்த்தது இந்தியா; 2ஆவது டெஸ்டில் அபார வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

 இதில், நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி திணறி வந்தது.

இந்நிலையில், 54.2 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளதால், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் தான் பெற்ற தோல்விக்கு இந்தியா பழி தீர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *