ஓபிசி இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு

ஓபிசி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 4 வகையாக பிரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2633 பிரிவினருக்காக, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், மத்திய அரசு 27% இடஒதுக்கீட்டைப் பின்பற்றி வருகிறது. இந்த 27% இடஒதுக்கீட்டை, 2%, 6%, 9%, 10% என நான்கு வகைகளாகப் பிரித்து வழங்க பரிந்துரைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி ரோகினி தலைமையிலான ஆணையம், இந்த உள் ஒதுக்கீட்டைப் பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.