பிப்ரவரி 24 முதல் மார்ச் 5வரை விருப்பமனுக்களை அளிக்கலாம் – அதிமுக தலைமை
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5வரை விருப்பமனுக்களை அளிக்கலாம் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24 முதல் மார்ச் 5 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 வரை விருப்பமனுக்களை பூர்த்தி செய்து அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுக்களுக்கு தமிழ்நாட்டில் 15000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.