நடிகை ஓவியா மீது பாஜக நிர்வாகி காவல் நிலையத்தில் புகார்

தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, நேற்று பிரதமர் மோடி, சென்னை வந்திருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வந்தனர்.

மேலும், ஒவ்வொரு முறை பிரதமர் சென்னை வரும் போதும் ‘கோ பேக் மோடி’ என்ற ஹாஸ்டேக் ட்ரண்ட் ஆவது வழக்கம். இதையடுத்து, நடிகை ஓவியா தன் ட்விட்டர் பக்கத்தில் ‘Go Back Modi’ என்று பதிவிட்டிருந்தார். இது, பாஜக ஆதரவார்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகை ஓவியாவின் இந்த ட்வீட் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர், அலெக்சிஸ் சுதாகர் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தின் மத்திய குற்றப்பிரிவு சைபர் செல்லுக்கு, ஒரு புகாரை அனுப்பியுள்ளார்.

அதில், ஓவியா மீது 124 (எ) (தேசதுரோக வழக்கு), 153 (இரு சமூகங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்துதல்), 294 (அவதூறு) 69 (எ) ஐடி பிரிவு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *