பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா ;திணறிய இங்கிலாந்து
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் இங்கிலாந்துக்கு மோசமாக அமைந்துள்ளது. வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து ஆல் அவுட்டாகியுள்ளது .
முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்த இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால், கூடுதலாக குல்தீப் யாதவ், அக்சர் படேல் சேர்க்கப்பட்டனர்.
முதலில் ஆடிய இந்திய அணி, 329 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அடுத்து இன்று காலையில் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்துக்கு, ஆரம்பமே பேரிடியாக அமைந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வீழ்ச்சியைச் சந்தித்தது.
இதைத்தொடர்ந்து, இந்தியா தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ரோஹித் சர்மா, கில் ஜோடி ஆடத் தொடங்கியுள்ளனர். தற்போது இந்தியா 195 ரன்கள் அதிகம் பெற்று ஆடி வருகிறது.