பாஜக மாவட்ட தலைவரை நீக்கக்கோரி பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்

பிஜேபி மதுரை மேற்கு மாவட்ட தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி,  பிஜேபி கட்சியினரே கண்டன போஸ்டர் –  பிஜேபிக்கும், பெண்களுக்கும் அவப் பெயரை ஏற்படுத்தியதாக பிஜேபி நிர்வாகி மீது குற்றம் சாட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதிகளில் பிஜேபி மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமாரை , பதவி நீக்கம் செய்யக்கோரிஅக்கட்சியினர் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

பிஜேபிக்கும்,  பெண்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்திய சசிகுமார் மீது  நடவடிக்கை எடுத்து அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி , பிஜேபி கட்சியினரால் அடித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, பிஜேபி மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமாருக்கும் , அவரது மனைவி செல்விக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால்,  மேலும் சசிக்குமாருக்கும் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிஜேபி பெண் நிர்வாகி ராஜேஸ்வரிக்கும் தொடர்பு இருப்பதாக சசிக்குமாரின் மனைவி செல்வி , திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவமும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *