காலைச் சிற்றுண்டி திட்டத்தை நாங்கள் கொடுக்கிறோம் சத்துணவு ஊழியர்கள் வேண்டுகோள்
காலைச் சிற்றுண்டி உணவை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக வழங்குவது தவிர்த்து சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும் என 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் கால வாக்குறுதியான வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதற்கு இணையான மாதாந்திர ஓய்வுதியம் ரூபாய் 6750 அகவிலைபடியுவுடன் வழங்க வேண்டும்,
10 வருட பணி முடித்த சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசின் அனைத்து துறை கல்வி காலி பணியிடங்களில் 50 சதவீதம் முன்னுரிமை அளித்து பணிவில் ஈடுபடுத்தி விட வேண்டும்,
மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் காலைச் சிற்றுண்டி உணவு வழங்குவதை கைவிட்டு சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்கள் மூலமாக காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்
உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்