பற்கள் வெள்ளையாக இதை செய்தாலே பொதும்!

பொதுவாக அனைவரும் தங்களது முகத்தையும், சருமத்தையும் அழகாக்குவதில் கவணம் செலுத்துவார்கள். அப்படி முகதிற்கு அழகு சேர்க்க விரும்புபவர்கள் பலர் பற்களை வெள்ளையாக வைத்துகொள்ள தவறிவிடுகிறார்கள். நம் பற்களை வெள்ளையாக வைத்து கொள்ள பல் மருத்துவரை அணுக வேண்டாம். பழ வகைகளை பயன்படுத்தி பற்களை வெண்மையாகுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி: சிவப்பு நிற ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கும் பற்களை வெண்மையாக்கும் தன்மை உண்டு. காலையில் எழுந்ததும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை இரண்டாக வெட்டி அதன் சாற்றை பற்கள் மற்றும் ஈறுகளில் 2 நிமிடங்கள் தடவி மசாஜ் செய்து விடலாம். அதன் பிறகு பல் துலக்கலாம். ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் மாலிக் அமிலம் பற்களை வெண்மையாக்குவதற்கு உதவும். அதுபோல் ஸ்ட்ராபெர்ரியில் காணப்படும் நார்ச்சத்து இயற்கை சுத்திகரிப்பானாக செயல்பட்டு பற்களை தூய்மையாக வைத்திருக்க துணைபுரியும். குறிப்பாக வாய் மற்றும் பற்களில் படிந்திருக்கும் தேவையற்ற பாக்டீரியாக்களையும் நீக்கிவிடும்.

கேரட்: கேரட் கண்களுக்கு மட்டுமல்ல பற்களுக்கும் நலம் சேர்க்கும். தினமும் ஒரு கேரட்டை நன்றாக கடித்து மென்று சாப்பிட்டு வரலாம். அது பற்களில் படிந்திருக்கும் ‘பிளேக்’ எனப்படும் மில்லியன் கணக்கான பாக்டீரியாக்களை வெளியேற்றச்செய்துவிடும். கேரட்டின் நடுப்பகுதியை பற்களில் தேய்த்துவந்தால் பற்கள் பிரகாசமாக மாறும். ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். கேரட் தவிர, ஆப்பிள், செலரி ஆகியவைகளும் பற்களை வெண்மையாக்குவதற்கு துணைபுரியும். ஈறு நோய் மற்றும் ஈறு அழற்சியையும் தடுக்கும். துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களையும் கொல்லும்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…