ஒரே இரவில் கருவளையம் மறைய!
பெண்கள் ஆண்கள் என்று இருபாலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் இந்த கருவளையம். கருவளையம் கண்களின் அழகை குறைத்து விடும். இந்த பிரச்சனையை வீட்டில் இருந்தபடியே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்திட முடியும்.
கருவளையம் மறைய உருளைக்கிழங்கை ஒரு சிறந்த அழகு சாதனப் பொருள் என்று சொல்லலாம். இந்த உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்யக்கூடிய அந்த அழகு குறிப்பு பற்றி கீழ் காணுங்கள்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு சாறு ஒரு கப், வெள்ளரிக்காய் சாறு ஒரு கப், கற்றாழை ஜெல் 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை சாறு, வெள்ளரிக்காய் சாறு மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அதில் காட்டன் பேட் அல்லது காட்டன் பஞ்சை ஊறவைத்து, 20 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
இரவு தூங்குவதற்கு முன் அந்த பேடை எடுத்து கருவளையம் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அந்த பேடை அகற்றிவிடுங்கள்.