பீட்ரூட் ஹேர் டை !
இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்திருக்கும். அந்த இளநரையை எளிதில் போக்க இயற்கை முறையில் தயாரித்த பீட்ரூட் ஹேர் டை உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை ஒரு கப், சிவப்பு செம்பருத்தி பூ 10, எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், தண்ணீர் 200ml, பீட்ரூட் 1, காபி தூள் 3 ஸ்பூன்.
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதை 2 மில்லி தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும்.
தண்ணீர் நன்றாக சூடாகியதும் அவற்றில் மூன்று ஸ்பூன் காபித்தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
இப்போது ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக்கொள்ளவும். அவற்றில் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து கொள்ளவும். அத்துடன் ஒரு கப் கருவேப்பிலை செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இந்த கலவையை அடுப்பில் வைத்துள்ள காபித்தூள் கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். பத்து நிமிடங்கள் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எடுக்கவும்.
இதை ஒரு மணி நேரத்திற்குள் நன்றாக ஆறிவிடும் .ஆனால், குறைந்தது 12 மணி நேரம் வரை வைத்திருந்து அதன் பின்புதான் ஹேர் டை யாக தலைப்பு பயன்படுத்த வேண்டும். எனவே அந்த கலவையை வாளியில் தயாரித்து மறுநாள் காலையில் சரியாக பயன்படுத்தலாம்.