வீட்டிலிருந்தபடியே கைகளை மேலும் அழகாக்குவது எப்படி ?

பொதுவாக நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நம் கைகளையும் கால்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் மாசடைந்த சுற்றுசூழல் காரணமாக, பெண்களுக்கும் ஆண்களுக்கும் முன் கைகள் கருமையாக காணப்பபடும். நம் கைகளை பளபளவென்றும் மாற்ற சுலபமாக நம் வீட்டில் இருக்குக்கும் பொருட்களை வைத்து பொலிவான கைகளை பெறலாம்.
ஸ்டெப் :1
தேவையான பொருட்கள்: மிதமான வெந்நீர் ,பேபி ஷாம்பு ,எலும்பிச்சை சாறு ,பேக்கிங் சோடா மாவு.
செய்முறை : வெந்நீரை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள், பிறகு ஒரு தேக்கரண்டி பேபிஷாம்பு, பேக்கிங் சோடா மாவு மற்றும் ஒரு எலும்பிச்சை பழத்தின் சாற்றை
சேர்த்துக்கொள்ளுங்கள். பின்பு இந்த கலவையில் இரு கைகளையும் பத்திலிருந்து பதினைந்து
நிமிடம் ஊறவைக்கவும். அதன் பின்பு கைகளை நன்றாக துடைத்துக்கொள்ளவும்.
ஸ்டெப் 02:
தேவையான பொருட்கள்: காபி தூள் இரண்டு தேக்கரண்டி, சர்க்கரை இரண்டு தேக்கரண்டி, ஒரு எலும்மிச்சை சாறு.
செய்முறை : ஒரு சிறிய பாத்திரத்தில் காபித்தூள் , சர்க்கரை மற்றும் எலும்பிச்சை சாறு சேர்த்து ஒரு கலவையாக எடுத்துக்கொள்ளவும். பின்பு அந்த கலவையை எடுத்து கைகளில் சமம்மாக தடவிக்கொள்ளவும், பின்பு பதினைந்து நிமிடத்திற்கு பிறகு கைகளை கழுவிவிடவும். இவ்வாறு வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்துவர பொலிவான கைகளை பெறலாம்