முடி கொட்டுவதை சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்!

இம்மாதிரியானா பிரச்சனையில் இருந்து வெளிவர ,அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாமல் சுலபமாக வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பெண்கள் தங்களது முடியை சரிசெய்து அழகான நீண்ட முடியை பெறலாம். அத்தகைய எளிய மற்றும் அதிக பயன்தரக்கூடிய குறிப்பு ஒன்றை கீழே காணலாம்.
தேவையான பொருட்கள் : வேப்பிலை,கற்றாழை,தயிர், செம்பருத்தி மலர், செம்பருத்தி இலை.
செய் முறை : ஒரு கப் வேப்பிலை, அரை கப் செம்பருத்தி இலை , இரண்டு செம்பருத்தி மலர் , சிறிது அளவு
கற்றாழை இவை அனைத்தையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை : அரைத்து எடுத்த கலவையை முடியில் நன்காக தடவியபின் பதினைந்து முதல் முப்பது நிமிடம் கழித்து முடியை கழுவவும். இப்படி மாதம் இருமுறை தொடர்ந்து செய்து வர பல விதமான பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வை பெறலாம்.