யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வழக்கு: மேலும் ஒருவர் கைது !!
சேலம் மாவட்டம் ஓமலூரில் யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்திற்கு புறம்பாக தற்போது வரையில் பலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கஞ்சா விற்பனை மற்றும் பதுக்குவது துப்பாக்கி தயாரிப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுப்பட்டுவது தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில் ஓமலூரில் கடந்த 20- ஆம் தேதி யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்தாக நவீன்சக்கரவர்த்தி சஞ்சய் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி மற்றும் முகமூடிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் கியூ பிரிவு காவல்துறையினர் இரண்டு பேரிடம் விசாரனை மேற்கொண்டனர். அப்போது புரட்சியாளராக உருவாகும் நோக்கி துப்பாக்கி தயாரித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அவர்களின் பள்ளி நண்பரான கபிலன் என்பவரும் இந்த விவகாரத்தில் உடன் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கிச்சுப்பாளையத்தை சேர்ந்த கபிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மேலும் பலர் உடந்தையாக இருந்தார்களா? என்ற பலகோண அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.