முன்னணி கார் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு..!! கவலையில் பணிபுரியும் ஊழியர்கள்..!!

மின்சார வாகனங்கள் மக்கள் இடையே அதிக வரவேற்பு பெற்று வரும் வேளையில்  தற்போது டீசல், பெட்ரோல் வாகனங்களின் தயாரிப்பு குறைத்து வருகிறது. அதுபோல் அதன் மீதான மக்களின்  ஆர்வம் குறைந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 1995-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் தமிழகத்தில் தனது தொழிற்சாலையை தொடங்குவதற்கான ஒப்பந்தம் போட்டது. அதன் பிறகு, சென்னை மறைமலை நகரில் கார் உற்பத்தி தொழிற்சாலை ஃபோர்டு ஆரம்பித்தது.

அதன் பின் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அங்கு தனது இரண்டாவது தொழிற்சாலையை ஃபோர்டு நிறுவியது. சனாந்த்தில் உள்ள தொழிற்சாலை அதி நவீன வசதிகளைக் கொண்டு உலகத் தரம் வாய்ந்த கார்கள் தயாரிப்பதற்கான இடமாக மாறியது. 

இந்த நிலையில் இந்த இரண்டு தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை நிறுத்துவது என்றும், இனிமேல் ஏற்றுமதி செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்த ஃபோர்டு நிறுவனம், அதைத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்பதைக் கருத்தில் கொண்டு, சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு இந்தியா பிரிவை கையகப்படுத்துவது குறித்து டாட்டா குழுமத்துடன் தமிழக அரசு கலந்துரையாடியது. 

இந்த பேச்சுவார்த்தை தோல்வியை தழுவிய நிலையில் ஜூன் மாதத்துடன் மறைமலை நகரில் உள்ள கார் தயாரிக்கும் நிறுவனமான போர்டு நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது இங்கு பணிபுரியும் ஊழியர்களிடையே பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நஷ்டத்தில் இருக்கும் இந்திய யூனிட்டை கைவிட்டு, மின்சார மற்றும் தானியங்கி வாகனங்களில் தனது முதலீடுகளை ஃபோர்டு நிறுவனம் அதிகரிக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *