செயல்படாத விமானங்கள்..!! புதிய தொழில் வாய்ப்பை ஏற்படுத்திய முன்னணி நிறுவனம்..!!

சென்னையில் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் புதிய விமானங்கள் மற்றும் அதிநவீன விமானங்களை முன்னணி நிறுவனங்கள் வாங்கி வருகிறது. இந்த நிலையில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்த விமானங்களை  ஓரம்கட்டி வருகிறது நிறுவனங்கள்.

இந்த நிலையில் நேனோ ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் விமானங்களில் இருந்து முக்கியமான உதிரிப் பாகங்களை தனியாகப் பிரித்து மறுசீரமைப்பு செய்து வருகிறது. இந்த உதிரிப் பாகங்கள்  மற்ற விமானங்களில் பயன்படுத்தவும், அல்லது உலோகமாக விற்பனை செய்யவும் முடியும் என அந்நிறுவனத்தின் தலைவர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் மெயின்டனன்ஸ், ரிப்பேர் மற்றும் ஆபரேஷன்ஸ்  செயல்பாடுகளை செய்து வருகிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் ஜெட் ஏர்வேஸின் போயிங் 777 விமானத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக டிஸ்மேன்டில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சென்னையில் மட்டும் ஏழு விமானங்களைப் இந்நிறுவனம் பிரித்துள்ளது நிறுவனத்தின் தலைவர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்த பற்றி மேலும் அவர் கூறுகையில் நிறுத்தப்பட  விமானங்களில் இருந்து எடுக்கப்பட்ட  உதிரிப் பாகங்கள் செயலில் உள்ள வணிக விமானங்களில் நிறுவப்பட்டு  பயன்படுத்தப்படலாம்.

இதன் மூலம் சர்வீசில் மெட்டீரியல்கள் பராமரிப்பு செலவு குறையும் என குறிப்பிட்டார். காரணமாக உலக அளவில் பிரிவுக்கு அதிகளவிலான டிமாண்ட் உருவாகியுள்ளது. இந்த வர்த்தகம் வெற்றியடையும் நிலையில் இத்துறை வர்த்தகத்திற்கு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சென்னை முக்கிய நகரமாக மாறும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *