இந்தியாவில் கார் விற்பனையில் அசத்தும் கியா நிறுவனம்..  

இந்தியாவில் முன்னனியில் இருக்கும் கார் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி கார் விற்பனையில் கியா நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 19,019 கார்களை  கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

கொரோனா பரவலுக்கு பிறகு கார் உற்பத்திக்கான மூலப் பொருட்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக உலக அளவில் கார்களின் உற்பத்தி செலவு பல மடங்கு  கூடியது. முக்கிய பொருளான செமிகண்டக்டர் சிப் பற்றாக்குறையின் காரணமாக உற்பத்தி பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டது. 

அதன் காரணமாக கார்களின் விலையும் பல மடங்கு  உயர்த்தியுள்ளன.  இதன் காரணமாக பல நிறுவனங்களில் கார் விற்பனை மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டுமே கிட்டத்தட்ட 19,000 கார்களை இந்தியாவில் கியா நிறுவனம்  விற்பனை செய்து அசத்தியுள்ளது. 

இதன் மூலம் இந்தியாவில் கியாவின் சந்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என  கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் செல்டோஸ் 7,506 கார்கள் அதிக அளவு விற்பனை ஆகியுள்ளது என்றும் கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் 19,019 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 

தேவைக்கு ஏற்ப தொடர்ச்சியாக எங்களது உற்பத்தியை அதிகரித்து என்றும் இந்தியாவில் விரைவில் மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்போகிறோம் என கியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் தலைவர் ஹர்தீப் சிங் பிரார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மின்சார வாகனம் தயாரிக்க முன்னணி நிறுவனங்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *