இனி பறந்துட்டே இருக்கலாம் … விரைவில் வருகிறது ஏர் டாக்ஸி

விமானப் பயணம் என்பது பலருக்கும் கனவாக இருக்கும் இன்றைய சூழலில், அந்த கனவுகள் கண்முன்னே நனவாகப்போகும் காலங்கள் விரைவில் வர இருக்கின்றன.

இந்த ஏர் டாக்ஸி பயணங்கள் சிங்கப்பூரில் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிகபட்சம் அடுத்த 2 ஆண்டுகளில் ஏர் டாக்ஸி சேவை தொடங்கும். பிரபலமான நகரங்களான மரினா பே மற்றும் சென்டோசா நகரங்களில் 10 முதல் 20 விமான டாக்ஸிகள் முதன் முதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வோலோகாப்டர் என்ற நிறுவனம் ஏர் டாக்ஸி சேவையை வழங்க உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ள வோலோகாப்டர், அடுத்தகட்டமாக ஆசிய நாடுகளுக்கும் ஏர் டாக்சிஸி சேவையை விரிவாக்கம் செய்வதை இலக்காக கொண்டுள்ளது.

இதுகுறித்து முதற்கட்டமாக நகரப் பகுதிகளின் அமைப்பு, தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வுகளை வோலோகாப்டர் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் தெரிவிக்கையில், ” அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஏர் டாக்சி சேவையை சிங்கப்பூரில் தொடங்குகிறோம். முதலில் மரினா பே உள்ளிட்ட நகரங்களில் தொடங்கும் தங்கள் நிறுவனத்தின் சேவை, அடுத்தடுத்த பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளோம். இதன் மூலம் தொலைதூர பயண சேவைக்கான நேரம் வெகுவாக குறையும்” எனத் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ஏர்டாக்ஸிக்கு தேவையான லைசென்ஸ் அனுமதியை வோலோகாப்டர் நிறுவனம் இன்னும் பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…