எலான் மஸ்க்கிற்கு வந்த புது பிரச்சனை –  இனவெறியை தூண்டுகிறதா டெஸ்லா

கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்லா நிறுவனத்தில் இன பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல் அதிகமாகி வருகிறது என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. ஊழியர்கள் வேலைக்கு சேர்வதற்கு முன்பே  ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கப்படுவதால், இப்புகார்கள் ஏதும் வெளி வருவதில்லை.

இதுகுறித்து கலிஃபோர்னியாவின் சிவில் உரிமைகள் கட்டுப்பாட்டாளர் தெரிவித்தது , சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மின்சார கார் தயாரிக்கும் தொழிற்சாலையான டெஸ்லா நிறுவனம்  கறுப்பினத் தொழிலாளர்களை அடிமைத்தனமாக நடத்தி வருகின்றனர்.எனவே இந்த  இனப் பாகுபாட்டிற்காக Tesla Inc. மீது வழக்குத் தொடுப்பதாகக் கூறினார்.

இதுகுறித்து ஏஜென்சியின் இயக்குனர் கெவின் கிஷ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், டெஸ்லாவின் ஃப்ரீமாண்ட் தொழிற்சாலை ஒரு இன ரீதியாக பிரிக்கப்பட்ட பணியிடமாகும், அங்கு கறுப்பினத் தொழிலாளர்கள் இன அவதூறுகளுக்கு ஆளாகிறார்கள். மேலும் வேலை ஒதுக்கீடுகள், ஊதியம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் பாரபட்சம் காட்டப்படுகிறார்கள். மேலும்  தினசரி அடிப்படையில், கறுப்பினத் தொழிலாளர்கள் கழிவறை சுவர்கள், லாக்கர்கள், பெஞ்சுகள், பணி நிலையங்கள், மதிய உணவு மேசைகள் மற்றும் இடைவேளை அறை ஆகியவற்றில் இனவெறி கிராஃபிட்டிகளைப் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.எனவே நாங்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்று தெரிவித்தார்.இந்த பிரச்சனைகளால் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 2% வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…