2.30 மணி நேரம் சார்ஜ் செய்தால் 3,200 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்

உலகின் முன்னணி சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களில் போர்ஷே (Porsche)-வும் ஒன்று. இந்நிறுவனத்தின் டேகான் இவி (Taycan EV) எனும் எலெக்ட்ரிக் கார் மிகக் குறைவான சார்ஜ் நேரத்தில் மிக நீண்ட தூரம் பயணித்து அசத்தியிருக்கின்றது. வெறும் 2 மணி நேரம் 26 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 2,834.5 மைல் தூரம் அக்கார் பயணித்திருக்கின்றது.அதாவது, 3,837.5 கிமீ தூரம் வரை பயணித்துள்ளது. 

இந்த சிறப்பான ரேஞ்ஜ் திறன் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தகைய சூப்பர் ரேஞ்ஜ் திறனே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. மேலும், இத்தகைய மிக நீண்ட தூரத்தை கடக்க போர்ஷே டேகான் இவி எலெக்ட்ரிக் கார் மிக மிக குறைவான நேரங்களையே எடுத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 போர்ஷே டேகான் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ஜ் திறனை ஆராயும் பொருட்டு செய்யப்பட்ட சோதனையிலேயே இந்த ஆச்சரிய தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜல்ஸ் தொடங்கி நியூயார்க் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே இந்த சோதனையோட்டம் மேற்கொள்ள பட்டது. இரு நகரங்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி 4 ஆயிரம் கி மீட்டர்கள் ஆகும். போர்ஷே டேகான் எலெக்ட்ரிக் காரை போலவே இதற்கு முன்னதாக வேற்று நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் பல இத்தகைய சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இவை அனைத்தைக் காட்டிலும் மிக சிறப்பான ரேஞ்ஜ் திறனை டேகான் இவி-யே வெளிப்படுத்தியது. ஆகையால், கின்னஸ் உலக சாதனையில் 2021 போர்ஷே டேகான் இடம் பிடித்துள்ளது. எலெக்ட்ரிக் காரின் சாதனை குறித்த நிகழ்வை போர்ஷே நிறுவனம் காட்சிப் பதிவு செய்திருக்கின்றது. இத்துடன், ஜிபிஎஸ் வாயிலாகவும் கார் ட்ராக் செய்யப்பட்டிருக்கின்றது. இவை அனைத்தும் சரி பார்க்கப்பட்ட பின்னரே கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் டேகான் இடம் பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. உலகில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் மிக கவர்ச்சியான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக டேகான் இவி இருக்கின்றது. இது அதிக செயல்திறன் மிக்க பேட்டரி, சூப்பர் ஃபாஸ்ட் திறன் கொண்ட மின் மோட்டார் மற்றும் பிரீமியம் அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. 

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…