அதிகரிக்கும் இ-பைக் விற்பனை!

நாள்தோறும் பெட்ரோல்,டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பலரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சிலர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை சமாளிக்க சைக்கிள் பயணத்திற்கு தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். அண்மையில், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளது என்ற புள்ளி விவரமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இவை ஒரு புறமிருக்க, தற்போது வாகன ஓட்டிகள் மத்தியில் இ-பைக் மோகம் அதிகரித்துள்ளது. பலரும் இன்ஜின் பைக்குகள் பயன்படுத்துவதிலிருந்து மாறி இ-பைக் பக்கம் இழுக்கப்பட்டுள்ளனர். இதனால் சந்தையில் இ-பைக்குகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
மக்கள் பலரும் சாதாரண பைக்குகளில் இருந்து எலக்ட்ரிக் பைக் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதால் எலக்ட்ரிக் பைக்குகளின் தயாரிப்பு அதிகபடுத்தபட்டுள்ளது.
அண்மையில், ரிவோல்ட் RV 400 எலக்ட்ரிக் பைக்குளுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளது. இதன் மூலம் மக்கள் எலக்ட்ரிக் பைக் வாங்க எவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த பைக்குகள் முன்பதிவு செய்தவர்களுக்கு கிடைப்பதற்கு இன்னும் நான்கு மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.